ஆண்மைக்குறைபாடு என்பது இன்றைக்கு அநேக இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது. உறுப்பு எழுச்சியின்மையினால் மன உளைச்சலுக்கு ஆளாகி மருகிப் போய்விடுகின்றனர் பல ஆண்கள். இந்த குறைபாடு உடையவர்களுக்கு கைகொடுக்கும் மூலிகையாக உள்ளது ‘ஜின்செங்' எனப்படும் மூலிகை வேர்.
இந்த வேரிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மாத்திரை ஆண்மைக்குறைபாடு, ஆண்குறி மலட்டுத் தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக இருப்பது சோதனை மூலம் தற்போது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக கொரியாவைச் சேர்ந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள யோன்சீ மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது ஆண் மலட்டுத்தன்மை உள்ள ஒரு 119 ஆண்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதிப்பேருக்கு கொரியஜின்செங் வேர் அடங்கிய மாத்திரைகள் ஒரு நாளைக்கு 4 கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு அவர்களது செக்ஸ் வாழ்க்கையில் மாற்றம் இருப்பது தெரியவந்தது.
இதேபோல் மலட்டுத் தன்மை, ஆண்குறிஉயிர்ப்பின்மை, செயலிழந்த ஆண்குறி ஆகிய குறைபாடுகள் உள்ள 100 பேர் தேர்வு செய்யப்பட்டு சிலவாரங்களுக்கு ஜின்செங் மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. சில வாரங்களுக்கு இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஆண்மையிழந்த பல ஆண்கள் அதன் பிறகு செக்ஸை உத்வேகத்துடன் அனுபவித்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜின்செங்கில் உள்ள ஜின்செனாசைட்அல்லது பேனாக்சாசைட் என்ற ஒரு மூலப்பொருளே ஆண்குறி உயிர்ப்படைய மூலக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜின்செங் எடுத்துக் கொண்டால் பலன் இருக்கும் என்பது ஒரு வதந்தி வடிவமாகவே இருந்து வந்தது, ஆதாரமற்றுத்தான் அந்த ஜின்செங் பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதோ ஜின்செங் உட்கொண்டவர்களின் செக்ஸ் வாழ்க்கை மீண்டும் உயிர்ப்புடனும் உற்சாகமாகவும் மாறியுள்ளது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டதை அடுத்து , ஜின்செங் விற்பனை இனி சந்தையில் சக்கை போடு போடும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த ஆய்வு மலடு பற்றிய சர்வதேச ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. Continue